டாக்குமெண்ட் ரூம் GHOST PART -II

நா இந்த கம்பெனில சேந்து ஒரு வருஷம் ஆகுது வேலைக்கு சேந்த புதுசுல எல்லாமே நல்லாதான் போச்சு நா ரெகுலரா டே ஷிப்ட் ல தான் வருவேன் ஆனா சாட்டர்டே ஆனா கொஞ்சம் வேல அதிகமா இருக்கும் ஆபீஸ் ல இருந்து கிளம்பவே மணி 1,2 ஆய்டும் எப்பவுமே நானும் என் மேனஜரும்தான் இருப்போம் ஆனா ஒருநாள் அவரோட பெரியப்பா இறந்துட்டாருன்னு லீவுல இருந்தாரு அன்னைக்கு நான் மட்டுந்தா ஆபீஸ் ல இருந்த தனியா வேல செய்ய போர் அடிச்சது நா இருக்குறது செகண்ட் ப்ளோர் 4த் ப்ளோர் லதான் கேண்டீன் இருக்கு உனக்கே தெரியும் நைட் அன் டைம்ல ஆபீஸ் பாயலாம் கெடயாது நாமதான் காபி வெண்டிங் மெஷின் ல போட்டு குடிக்கணும்
காபி குடிக்க 4த் ப்ளோர் போனேன் போகும்போதே எனக்கு ஒரு தயக்கம் இருந்தது தனியாவா போறதுன்னு இருந்தாலும் லிப்ட்ல ஏறி 4த் ப்ளோர் போனேன் போய் கேன்டீன் ல இருக்குற காபி மெஷின் ஆன் பண்ணி கோப்பைல காபி பிடிச்சிட்டு டேபிள் ல போய் உட்காந்த மொபைல நோண்டிகிட்டே கப் ப டேபிள் மேல வச்சிருந்த கப் திடீர்னு சாஞ்சி காபி கொட்டிடுச்சு நான்தான் காய் தவறி தட்டி விட்டுட்டன்னு நெனச்சு மறுபடியும் காபி பிடிச்சிட்டு வந்து உட்காந்த, உட்காந்த
உடனே பவர் கட் ஆகி லைட் அணைஞ்சுடுச்சு நா மொபைல் லைட் ஆன் பண்ண ட்ரை பண்ண ஆனா அவ்வளவு
நேரம் நல்லா வொர்க் பண்ண மொபைல்ல லைட் ஆன்
ஆகுல முயற்சி பண்ணி லைட் ஒருவழியா ஆன் பண்ண அப்போ எதோ என் பக்கத்துல நிக்கற
நிழல் என் மொபைல் லைட் வழியா தெரிஞ்சுது என்னான்னு திரும்பி பாக்க அகோரமா ஒரு பெண்
உருவம் என்ன ஓங்கி அறைஞ்சது
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியல கண்
முழிச்சி பாக்கும்போது நான் ஹாஸ்பிடல் ல இருந்த பக்கத்துல என்னோட மேனேஜர் இருந்தாரு
எனக்கு என்ன நடந்தது நான் எப்படி இங்க வன்தேன்னு கேட்டேன் நீ நம்ம கேன்டீன்ல மூச்சு
பேச்சு இல்லாம கெடந்த நம்ம செக்யூரிட்டி தா மேனேஜ்மென்ட் கு இன்போர்ம் பண்ணி உன்ன கொண்டு
வந்து சேத்தாங்க நீ ஏன் தனியா அங்க போன ?இல்ல சார் நீங்க லீவு ல இருந்ததால நா தனியா
போக வேண்டி ஆயிடுச்சு ஏன் சார் ?அதுல்லப்பா எப்பவாவது உன்ன நான் தனியா அனுப்பி இருக்கேனா
அந்த கேன்டீன் ல பேய் இருக்கு இந்த பில்டிங் கட்டும்போது இறந்து போன பொண்ணோட ஆவி இன்னும்
இங்கயேதான் சுத்துதுன்னு நம்ம ஆபீஸ்ல வேல செய்ற பழைய ஆளுங்களுக்கு நல்லா தெரியும் அதுனாலதா
உன்ன தனியா அனுப்பினது இல்ல ஆனா பேய் இருக்குன்னு சொன்னா நீ பயந்துடுவியோன்னுதா உன்கிட்ட
சொல்லலைன்னு சொன்னாரு அதுக்கப்புறம் என்னோட கழுத்து எலும்பு பாதிக்கப்பட்டு ரெண்டு
மாசம் டிரீட்மென்ட் ல இருந்தேன் இப்போ புரியுதா என்னோட பயத்துக்கு காரணம் என்னன்னு
சரி விடு உன் நல்ல நேரம் தப்பிச்சு வந்துட்ட இனிமேல் 4த் ப்ளோர் தனியா போகாத நிம்மதியா
படுத்து தூங்குன்னு சொல்லிட்டு ஆபீஸ்க்கு போய்ட்டான்
என்னோட மனசுக்குள்ள ஏன் அது நம்மள எதுவும் பண்ணல ஒருவேள நம்மகிட்ட ஏதாவது சொல்ல ட்ரை பண்ணுதோனு நெனச்சேன் சரி மறுபடியும் இன்னைக்கு ராத்திரி எப்படியாவது அதுகிட்ட பேசணுன்னு முடிவு பண்ணிட்டு யோசனைல அப்படியே அசந்து தூங்கிட்ட நைட் ஆபீஸ்க்கு போயிடு எப்போ மணி ஆகும்னு காத்துட்டு இருந்த மணி சரியாய் 12.45 நேத்து நான் டாக்குமெண்ட் ரூம்க்கு போன நேரம் கெளம்பி லிப்ட்ல ஏறி 4த் ப்ளோர் போனேன் நேத்து நடந்தா மாறி கரெக்டா லிப்ட் விட்டு வெளிய வந்ததும் கரெண்ட் கட் மொபைல் லைட் ஆன் பண்ணி டாக்குமெண்ட் ரூம்குள்ள ஹலோ இங்க யாராவது இருக்கீங்களானு கேட்டுகிட்டே போனேன் எந்த ஒரு சத்தமும் இல்ல ரெண்டு மூணு தட கேட்டும் எந்த ஒரு சத்தமோ மாற்றமோ இல்ல சரி லைட் ஆப் பண்ணி பாப்போம்னு லைட் ஆப் பண்ணிட்டு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண எந்த ஒரு அசைவும் என்னால உணர முடியல சரின்னு லைட் ஆன் பண்ணும்போது டக்குன்னு என்கிட்டே இருந்து வேகமா ஒரு உருவம் விலகி போச்சு பின்னாடியே ஓடி போனேன் அது டாக்குமெண்ட் ரூம் கதவுகிட்ட போகும்போது நேத்து எனக்கு அடிச்ச அதே வாசனை அப்படியே உருவமும் தெரிய ஆரம்பிச்சது ஒரு அழகான பெண் உருவம் கேன்டீன் நோக்கி போச்சு பின்னாடியே போனேன் கேன்டீன் நெருங்க நெருங்கி அந்த உருவம் கொஞ்சம் கொஞ்சமா மாறி நீளமான முடி பெரிய உருவமா ஆனது ஆனாலும் நான் பின்னாடியே போனேன் நிழலை மட்டுந்தா என்னால பாக்க முடிஞ்சுது அதோட உருவம் முழுசா மறைஞ்சு போச்சு நிழலை பின்தொடர்ந்து நில்லு நான் உங்கிட்ட பேசணுன்னு சொன்னேன் ஆனா எந்த பதிலும் இல்ல மறுபடியும் உனக்கு என்னால என்கிட்டே ஏதாவது சொல்லணுமான்னு கேட்டான் ,கோவமான குரல்ல கணீர்னு ஒரு சத்தம் வெளிய போடான்னு என்ன சொன்னுச்சு ,இல்ல நீ இங்க இருக்குற எல்லாரையும் பயமுறுத்தற ஆனா கொலை பண்ணல ஏன் இப்படி பண்ற சொல்லு என்னால உனக்கு உதவ முடியும்னு சொன்னேன் ,யாரோட உதவியும் எனக்கு வேண்டாம் இங்க இருந்து வெளிய போ இல்லனா உன்ன இப்போ கொன்னுடுவேன்னு சொன்னது ,நான் உனக்கு பயப்படமாட்டேன் ஆனா இங்க நீ பண்ற அமானுஷ்யங்களை என்னால சகிச்சிக்க முடியாது உனக்கு உதவி பண்ண நினைக்கிற என்னையும் ஏன் கொல்ல நினைக்கிற கேக்கும்போதே என்னோட கழுத்துல கைய வச்சு வெளிய தூக்கி எறிஞ்சு போ இல்லனா கொன்னுடுவான்னு சொல்லுச்சு இனி இங்க இருக்குறது சரி இல்லனு வேகமா லிஃப்டுக்கு வந்தேன் பவர் வந்து லைட்டும் ஆன் ஆனது லிப்ட் வழிய கீழ என் சீட்டுக்கு வந்துட்டேன் ,,
ஆனா இப்போவும் ஏன் அது யாரையும் கொல்லல அந்த இடத்தை விட்டும் போகல அப்படின்ற கேள்விக்கு எனக்கு விடை தெரியல இன்னும் அந்த கம்பெனில தான் வேல செய்யுறேன் ஒரு நாள் மறுபடியும் நிச்சயமா அதுகிட்ட பேசுவேன் என்னால முடியும்முன்னா அதுக்கு உதவுவேன் அது நடந்தா நிச்சயம் உங்ககிட்ட ஷேர் பண்ணுவேன் தேங்க யு .