Thursday, 27 August 2020

 

                                     

டாக்குமெண்ட் ரூம் GHOST

                                                                

                                                                                                  --   Sarathi Sparks --

PART-1

நா ஷஹாரியா ,பெங்களூரு ல என்னோட ஆபீஸ்ல நடந்த அமானுஷ்ய அனுபவங்களதா உங்களோட இப்போ ஷேர் பண்ண போறேன்

என்னோட சொந்த ஊர் தமிழ்நாடு கர்நாடக பார்டர்ல ஒரு சின்ன கிராமம் அப்பா என்னோட சின்ன வயசுலயே இறந்துட்டாரு அதுக்கப்புறம் எங்க அம்மா என்ன ஹாஸ்டல் ல சேத்துட்டாங்க ஸ்கூல் காலேஜ் எல்லாமே ஹாஸ்டல் ல இருந்துதான் ,பிரண்ட்ஸ் எல்லாம் பேய் பத்தி பேசுவாங்க ஆனா அதுலெல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்ல ,,,அன்னைக்கு அந்த விஷயம் நடக்குற வரைக்கும் .

நா இன்ஜினியரிங் முடிக்கும்போதே ஒரு கம்பெனில கேம்பஸ் இன்டெர்வியூ ல வேல கெடச்சது என்னோட ரூம் கம்பெனில இருந்து ரொம்பதூரம் அதனால ரூம் காலி பனிட்டு கூட வேல பாக்குற ஒருத்தர் ரூம்க்கு போயிட்டே .அவன் ஓவர் பயந்தாங்கொள்ளி இருட்டன அப்புறம் கடைக்கு தனியா போக கூட பயப்படுவான் எனக்கு மாக்ஸிமும் நைட் ஷீப்ட் தான் இருக்கும் நா நைட் ஷிப்ட் போயிட்டு வந்தாவே அவன் புராணத்தை ஆரம்பிச்சிடுவான் நைட் ல அங்க சத்தம் கேட்டுச்சு இங்க யாரோ சிரிக்கிறா மாறி இருக்குன்னு  ஏதாவது சொல்லிக்கிடே இருப்பான் என்ன சொல்லியும் அவன் பயத்தை மாத முடியல

அன்னைக்கு எனக்கு நைட் ஷிப்ட் ராத்திரி 10 மணிக்கு போன காலைல 6 மணிக்குதான் முடியும் ஒரு டாக்குமெண்ட் ரெடி பண்ண வேண்டி இருந்ததால டே ல தூங்கலை அப்படியே ஆபீஸ்க்கு வந்துட்ட என்னோட சீட் 1 ப்ளோர் ல டாக்குமெண்ட் ரூம் அப்புறம் டைனிங் ரூம் ரெண்டுமே 4 த் ப்ளோர் ல இருக்கு .காபி டீ எது வேணுனாலும் 4த் ப்ளோர் தா போகணும்.

மணி 12.45 ல் 1 இருக்கும் ஒரு டாக்குமெண்ட் எடுக்க மேல போனேன் நா லிப்ட் ல ஏறுற வரைக்கும் எந்த பவர் பிராபலமும் இல்ல லிப்ட் 4த் ப்ளோர் போயி லிப்ட் திறந்த உடனே லைட் ஆப் ஆயிடுச்சு ஆனா அத நா பெருசா எடுத்துக்கல உடனே என்னோட மொபைல்ல இருந்த லைட்ட ஆன் பண்ணி இருட்டுக்கு நடுவுல நடந்து ரூம்க்கு போனேன் அந்த சின்ன வெளிச்சத்துல அந்த ரூம் மிரட்றா மாறி இருந்தது டாக்குமெண்ட்ட தேடிட்டு இருக்கும்போது சம்மந்தமே இல்லாம ஒரு வாசனை வீசறத என்னால உணர முடிஞ்சது ஏதோ தப்பா இருக்குன்னு என்னோட உள் மனசு சொல்லிக்கிடே இருந்தது இருந்தாலு டாக்குமெண்ட் ட தேடி ஒரு வழியா எடுத்துட்டு திரும்பும் பொது யாரோ என்னோட முதுகுல வேகமா அடிச்சி தள்ளி விட்டா மாறி கீழ விழுந்த அது வரைக்கும் எப்பவும்  பயப்படாத எனக்கு பயம் வந்தது எழுந்து வெளிய வேகமா ஓட ஆரம்பிச்ச கதவுகிட்ட நெருங்க நெருங்க கதவு தானா பட்டுனு மூடிக்கிச்சு எவ்வளவு கஷ்டப்பட்டும் கதவை திறக்க முடியல அந்த நேரம் அமானுஷ்யம் இருக்கறத மனசு ஏத்துக்கிச்சு சத்தமா கத்த தொடங்கின என்ன பயமுறுத்தாத ஒன்னு வெளிய விடு இல்லனா இங்கேயே கொன்னுடு ஆனா உனக்கு நா பயப்பட மாட்ட னு சொன்ன உடனே கதவு மெதுவா அசையுற சத்தம் கேட்டது கீழ விழுந்த என்னோட மொபைலை எடுத்து வெளிச்சத்துல கதவ திறக்க முயற்சி பண்ணி ஒரு வழிய கதவை தெறந்து வெளிய ஓடி வந்தேன் வெளிய வந்த உடனே கரண்ட் வந்து லைட் ஆன் ஆயிடுச்சு அப்படியே வேகமா போய்  கேன்டீன்ல தண்ணிய குடிச்சேன் எவ்வளவு குடிச்சேன்னு தெரியல நடந்தது எல்லாம் எனக்கு மர்மமா இருந்தது ஏன் இப்படி நடந்ததுன்னு யோசிச்சிக்கிட்டே லிப்ட் ஏறி என்னோட சீட்டுக்கு வந்துட்ட

விடியிற வரைக்கும் எந்த வேலையும் செய்யாமல் எப்படா விடியும்னு காத்துகிட்டு இருந்தேன் விடிந்த உடனே நேரா ரூம்க்கு போயிடு என்ன நடந்ததுன்னு புரியாம ஒடஞ்சி உட்காந்துருந்த நா இருந்தத பாத்துட்டு என்னோட ரூம் மேட் அவனா வந்து என்ன அத பாதியானு கேட்டான் எனக்கு தூக்கி வாரி போட்டது என்னடா சொல்ற னு நா கொளப்பதோட கேட்ட ??அவன் சொல்ல ஆரம்பிச்சா இல்ல எனக்கு முன்னாடியே தெரியும் ஒருநாள் அது உன்ன மிரட்டும்னு ஆனா நீதான் நா சொல்றத எப்போவுமே கேக்க மாட்டியே பல முறை உன்கிட்ட சொல்ல முயற்சி பண்ண ஆனா நீதான் கேக்க தயாரா இல்ல .

இந்த மூணு மாசமாதான் நா வேலைக்கு போறேன் அதுக்கு முன்னாடி ரெண்டு மாசம் லீவு ல இருந்தேன்னு சொன்னான் எனக்கு அவன் மேல கோவம் வந்தது ஏன்டா நா கேக்கலைனா கூட நீ எனக்கு சொல்லி இருக்க வேண்டாமா அப்படி என்ன நடந்தது உனக்கு ஏன் 2 மாசம் லீவு ல இருந்த ??நா கேக்க கேக்கவே அவன் கண்ணுல அந்த பயம் தெரிஞ்சுது பயத்தோடவே என்கிட்டே சொல்ல ஆரம்பிச்சா.

தொடரும் ,,,,

உங்கள் அமானுஷ்ய அனுபவங்களை என்னுடன் பகிர tamilghoststories@gmail என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் 


2 comments: